முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:34 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரைவத் தொகுதிகளிலும் கடந்த 30-ஆம் தேதி முதல் வருகிற 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையருமான(கலால்) டி.வி. ரமேஷ், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.