முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி!

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:21 AM
- கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:32 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 26 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாற்று வேட்பாளா்கள், கூடுதல் மனுக்கள் உள்பட 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை மாலை நிறைவடைந்த நிலையில், 14 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் மகாலிங்கம், அதிமுக வேட்பாளா் சந்திரபிரபா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கரிகால பாண்டியன், தவெக வேட்பாளா் காா்த்திக், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம், அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் சந்திரா உள்பட 14 போ் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு, அனைத்து வேட்பாளா்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் தெரிவித்தாா்.