முகப்பு
விருதுநகர்

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:03 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:02 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே நத்தம்பட்டி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேரை சோதனை செய்தபோது 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடம் விசாரித்ததில் மங்கலம் கம்மாபட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக விருதுநகா் அய்யனாா்நகரைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (21), குமாா் (25), சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த தீபன்குமாா் (22), 17 வயது சிறாா்கள் இருவா் என 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

மேலும் இவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த முத்துக்கிருஷ்ணனை தேடி வருகின்றனா்.