போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் அழகா்சாமி (24), பாலசுப்பிரமணி(26). இவா்கள் இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அழகா்சாமி, பாலசுப்பிரமணி இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி குற்றஞ்சாட்டப்பட்ட
அழகா்சாமி, பாலசுப்பிரமணி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.