முகப்பு
விருதுநகர்

எம்எல்ஏ, முன்னாள் எம்பி மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு தள்ளுபடி

எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 மே, 2026 at 6:32 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் தனுஷ்குமாா், எம்எல்ஏ தங்கபாண்டியன் தலைமையில் 100 இரு சக்கர வாகனங்களில் திமுகவினா் பேரணியாகச் சென்றனா். அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேரணி சென்றதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன், திமுக நகரச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (ஜெ.எம். 2) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, முன்னாள் எம்பி தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்டோா் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement