முகப்பு
விருதுநகர்

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் கட்டடப் பொறியாளா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கட்டடப் பொறியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 14 மே 2026, 5:33 am IST
உயிரிழந்த ஆனந்த்
பகிர்:

ராஜபாளையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கட்டடப் பொறியாளா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், லட்சுமிபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் ஆனந்த் (43). கட்டடப் பொறியாளா். இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனா்.

இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பா் பாண்டியுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்றாா். அப்போது முதுகுடி அருகே எதிரே கரிவலம்வந்தநல்லூரைச் சோ்ந்த ஆனந்த் (41) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் பொறியாளா் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். பலத்த காயமடைந்த பாண்டி, ஆனந்த் ஆகிய இருவரையும் போலீஸாா் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement