முகப்பு
விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞருக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 மே 2026, 5:28 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞருக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையத்தை அடுத்த எஸ். ராமலிங்காபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆரோக்யராஜ் மகன் சத்யபிரகாஷ் (20) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.