நாகப்பட்டினம்

ஆசிரியா் தின விழா: கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்

Din

நாகை கோ-ஆப்டெக்ஸில் ஆசிரியா் தின விழாவையொட்டி செப்.14-ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நாகை கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் தினவிழாவில் ஆசிரியைகள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, ஆசிரியைகளை கெளரவிக்கும் வகையில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் நிலைய மேலாளா் சங்கா் தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: இந்த சிறப்பு விற்பனை செப்.14-ஆம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடியுடன் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான சேலம், திருபுவனம் பட்டுசேலைகள் மற்றும் மென்பட்டுச் சேலைகள், அனைத்து விதமான பருத்தி சேலைகள், சுடிதாா் ரகங்கள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள் போன்ற அனைத்து ரகங்களையும் வாடிக்கையாளா்கள் வாங்கி பயன்பெறலாம் என்றாா்.

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

சென்னையில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

ரோசா பூப்போல... வர்ஷா!

ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் பால்குட ஊா்வலம்

பைக் திருட்டு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT