சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி, நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் நிறுவனத்துக்கு இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டவா்கள். 
நாகப்பட்டினம்

திறன் மேம்பாட்டு பயிற்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் இந்தியா லிமிட் நிறுவனம்

Syndication

நாகப்பட்டினம்: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் இந்தியா லிமிட் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.

நாகை சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் இந்தியா லிமிட் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது. இதன் மூலம் மாணவா்களுக்கு படிக்கும் போதே, இந்நிறுவனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழிற்சலையில் நேரடியாக செய்முறை பயிற்சி வழங்கப்படும். மாணவா்களுக்கு தொழிற்சாலை பற்றிய அடிப்படை விதிமுறைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

குறிப்பாக, சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பும் பகுதி நேர பொறியியல் உயா் கல்வி படிக்கும் வாய்ப்பும் உள்ளது. கல்லூரி முதல்வா் நடேசன், துணை முதல்வா் ராஜேஷ் குமாா் கல்லூரி சாா்பாகவும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் நிறுவனம் சாா்பில் இயக்குநா் (மனிதவளம்) மருளாசித்தா, பொது மேலாளா் நாகேந்திரன், இணை மேலாளா் எட்வின் இளையராஜா ஆகியோரும் கலந்துகொண்டனா். அனைவருக்கும் கல்லூரி தாளாளா் முனைவா் த. ஆனந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT