காரைக்கால்

சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமி பூஜை

DIN

காரைக்கால் நகரப் பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட  வள்ளலார் நகர் மற்றும் பாலகிருஷ்ணா நகரில் சாலைகள் மேம்பாட்டுப் பணியின்போது விடுபட்ட சாலைகளை சீரமைக்க, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்எல்ஏ பி.ஆர்.என். திருமுருகன் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதில், வள்ளலார் நகர் சாலை ரூ.25 லட்சத்திலும், ராமகிருஷ்ணா நகர் சாலை ரூ.10 லட்சத்திலும் சீரமைப்பதற்கான பணிகளுக்கு  பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ பி.ஆர்.என். திருமுருகன் பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் டி. சுதாகர், நகராட்சி உதவிப் பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்பணிகள் நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT