அலுவலகப் பெண்களின் பிரச்னைகள் குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு
அலுவலகப் பெண்களின் பிரச்னைகள் குறித்து புதுச்சேரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் காரைக்கால் அரசு ஊழியர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அலுவலகப் பெண்களின் பிரச்னைகள் குறித்து புதுச்சேரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் காரைக்கால் அரசு ஊழியர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.
புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பயன்பாட்டு வணிகவியல் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு துறையினர் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை அண்மையில் சமர்ப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
காரைக்கால் சுகாதாரத் துறையில் பணியாற்றும், திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ. சௌந்தரரங்கனின் மகள் தேவகி கோவிந்தராஜ், அலுவலகப் பணியில் உள்ள பெண்களின் பிரச்னைகள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை தயாரித்து, அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனிடம் சமர்ப்பித்தார். அவருக்கு பரிசு, சான்றிதழை அமைச்சர் வழங்கினார்.