காரைக்கால்

பூர்வீக ஆதிதிராவிடர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

புதுச்சேரி அரசைக் கண்டித்து பூர்வீக ஆதிதிராவிட உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தோர் சனிக்கிழமை உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கல்வித்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் கண்.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
பூர்வீக ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், அரசின் திட்டங்கள் கிடைப்பதை புதுச்சேரி அரசு உறுதிப்படுத்தாததைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியராகக் திகழும் சங்கத் தலைவர் சந்திரகாசனுக்கு, ஓய்வு கால பணப்பயன்களை புதுச்சேரி அரசின் கல்வித்துறை வழங்காமல் காலம் தாழ்த்திவருவதாகக் கூறி, கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி அரசின் போக்கைக் கண்டித்து அமைப்பின் பல்வேறு நிர்வாகிகள் பேசினர். ஆதிதிராவிடர் நலன் காக்கப்படவேண்டும், அரசின் அலட்சியம் போக்கப்படவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT