காரைக்கால்

கால்நடைகளுக்கு பொங்கல் உணவாக கொடுக்க வேண்டாம்: கால்நடைத் துறை அறிவுறுத்தல்

DIN

பொங்கல் விழாவையொட்டி கால்நடைகளுக்கு அதிகமாக பொங்கல் உணவாக அளிக்க வேண்டாம் என கால்நடைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை சார்பில் வெளியிடபட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலின்போது விவசாயிகள் பொங்கலை கால்நடைகளுக்கு உணவாக அளித்து கொண்டாடுவர். இவற்றை சிறிதளவு கால்நடைகள் சாப்பிடுவதால் பாதிப்பு இல்லை. மாறாக, அதிகம் சாப்பிடும்போது, இரைப்பையில் புளிப்புத் தன்மை அதிகரிக்கிறது. இதனால், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் அழிந்துவிடுகின்றன.
எனவே, செரிமானம் தடைபடும்போது, தேவையில்லா தீமையளிக்கும் நுண்ணுரிகள் உருவாகிவிடும். சோர்வு, பசியின்மை, அசைப்போடுவது நின்றுவிடுதல், வயிறு உப்புதல், வயிற்றுப் போக்கு ஆகியவை நோய்க்கான அறிகுறியாகும். எனவே, கால்நடைகளுக்கு பொங்கல் சாதம் மற்றும் அரிசி உணவு அளிப்பதை தவிர்த்து தங்களது கால்நடைகளை நோய் மற்றும் இறப்பிலிருந்து பாதுகாத்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT