காரைக்கால்

மழலையர் மற்றும் விளையாட்டு விழா: பண்டாரவாடை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

காரைக்காலில் நடைபெற்ற மழலையர் கலை மற்றும் விளையாட்டு விழாவில் பண்டாரவாடை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் அதிகமான பரிசுகளை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். 
புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை, ஜவாஹர் சிறுவர் இல்லம் மூலமாக ஒவ்வோர் ஆண்டும் மழலையர் கலை மற்றும் விளையாட்டு விழா நடைபெறுகிறது. நிகழாண்டு காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்ற விழா கடந்த 5 நாள்கள் நடைபெற்றன. 
வட்டம் -1, வட்டம் -2-க்கு இடையேயான மழலையர் விளையாட்டு  விழாவான திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், மழலையர் கலை விழா காரைக்கால் ஜவாஹர்  சிறுவர் இல்லத்திலும் நடைபெற்றது. குழு நடனம், பாடல், தனி நடிப்பு, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், விநாடி- வினா உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மழலையர்கள் கலந்துகொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி
னார். இதில் திருநள்ளாறு கொம்யூன், பண்டாரவாடை அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர் 34 பேர் பரிசு, சான்றிதழ்களைப் பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளிப் பொறுப்பாளர் எம்.செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் திறனைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT