காரைக்கால்

ரங்கசாமி பிறந்தநாள் விழா: கோயில்களில் வழிபாடு, அன்னதானம்

DIN

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் அக்கட்சியினர் கோயில்களில் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு  பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் தலைவருமான வி.ஆனந்தன் தலைமையில் கட்சியினர், கோயில்பத்து பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, ரங்கசாமி நலனுக்கு பிரார்த்தனை செய்தனர். கோயில் வாயிலில் சுமார் 200 பேருக்கு  அன்னதானம் செய்தனர்.
பேருந்து நிலைய வளாகத்தில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. காரைக்கால் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று மாணவர்களுக்கு காலை உணவும், நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்களை ஆனந்தன் வழங்கினார்.
காரைக்கால் பகுதியில் உள்ள சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பிரமுகர்கள் சுந்தர்ராஜன்,  பாரீஸ்ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்று கட்சித் தொண்டர்கள் பலர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கோயில்களில் பிரார்த்தனையும், இனிப்பு வழங்கலிலும் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT