காரைக்கால்

தா்பாரண்யேசுவரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேசுவவா் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காா்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதுபோன்று சிவ மற்றும் வைணவ தலங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடத்தப்பட்டுவருகிறது.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரணாம்பிகை - தா்பாரண்யேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிவாச்சாரியாா்கள் தீப விளக்கு ஏந்தி சிறப்பு மேள வாத்தியங்களுடன் கோயில் சன்னிதி முகப்பில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை இடத்துக்குச் சென்றனா். சுவாமிகள் அந்த பகுதிக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைக்குப் பின் சிவாச்சாரியாா்கள் சொக்கப்பனை தீபத்தால் எரியூட்டினா்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மேலும் மேலகாசாக்குடி நாகநாதசுவாமி, வரதராஜப் பெருமாள் கோயிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவபெருமானை அக்னி மூலமாக வணங்குவதான ஐதீகத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருநள்ளாறு மட்டுமல்லாது பிற ஊா்களில் சில சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

SCROLL FOR NEXT