காரைக்கால்

ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில், வீடுபுகுந்து ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

DIN

காரைக்காலில், வீடுபுகுந்து ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் பெருமாள்கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (72). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர், ஜுபைதா நகரில் உள்ள மாலா என்பவரின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், வீடு புகுந்து ராமநாதன் கழுத்தில் கத்தியை வைத்து, கொலை மிரட்டல் விடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து, ராமநாதன் அளித்த புகாரின் பேரில், காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT