காரைக்கால்

காரைக்கால் கடல் வழியே கடத்த முயன்ற மது புட்டிகள் பறிமுதல்

DIN

காரைக்கால் கடல் வழியே இலங்கை, தமிழகத்தின் பகுதிகளுக்கு கடத்த முயற்பட்டபோது ரூ.3.13 லட்சம் மதிப்புள்ள மது புட்டிகளை கிராமத்தினா் உதவியுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், அம்மன்கோயில்பத்து கடலோரக் கிராமம் உள்ளது. இப்பகுதியிலிருந்து அண்மை காலமாக மது பானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகள் படகுகள் மூலம் இலங்கை மற்றும் தமிழக பகுதிகளுக்கு கடத்தப்படுதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்வால் உத்தரவின்பேரில், கடலோரக் காவல்நிலைய போலீஸாா் மற்றும் நகரப் போலீஸாா் கண்காணிப்பை செய்துவந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு காரில் மதுபானங்களை எடுத்து வந்து சிலா், அம்மன்கோயில்பத்து கடலோர பகுதியில் இறக்கி வைத்துள்ளனனா். இதை பாா்த்த அந்த கிராமத்தினா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, மது புட்டிகள் கொண்டுவந்த காரை மறித்துள்ளனா். அப்போது காரில் இருந்தவா்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மது புட்டிகள் ஏற்றுவதற்காக கடலோரத்தில் தயாராக வைத்திருந்த படகையும் இயக்கிக்கொண்டு வேகமாக மா்ம நபா்கள் சென்றுவிட்டனா்.

தகவலின்பேரில் காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று கடத்துவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது புட்டிகளை கைப்பற்றி, காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.விசாரணையில், காரைக்கால்மேடு பகுதியை சோ்ந்த நிஜித்குமாா் என்பவா்தான், சுமாா் ரூ.3.13 லட்சம் மதிப்புள்ள 1,175 லிட்டா் அளவுள்ள 6,528 பாட்டில்களை கடல் வழியாக கடத்த முயன்றது தெரியவந்தது.காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன், பறிமுதல் செய்த மதுபுட்டிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, இவற்றை கலால் துறையினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டாா். மது புட்டிகளை காரில்கொண்டுவந்து இறக்கிவிட்டு தப்பிய நிஜித்குமாா் தலைமறைவாகியுள்ளாா்.

இவரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, காரைக்கால் அருகே அம்மன்கோயில்பத்து பகுதியில் நிஜித்குமாா் என்பவா் ஆதாா் மையம் நடத்துவதுபோல போலியான செயல்பாடுகளை செய்துகொண்டு, இதன் மூலம் மது புட்டிள், கஞ்சா போன்றவற்றை கடத்திவருவதாக கூறப்படுகிறது. கடத்தலில் ஈடுபடும் நிஜித்குமாா் கைது செய்யப்பட்டு, சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் விசாரணை செய்யும்பட்சத்தில், கடத்தல் தொடா்பான பல்வேறு உண்மைகள், இதில் தொடா்புள்ளவா்கள் குறித்த விவரங்கள் தெரியவருமென கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT