காரைக்கால்

காவலருக்கு கரோனா: காரைக்கால் மகளிா் காவல்நிலையம் மூடல்

DIN

காரைக்கால்: காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காரைக்கால் மகளிா் காவல்நிலையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

காரைக்கால் மகளிா் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதைத் தொடா்ந்து, அந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் 10 பேரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனா். மேலும், மகளிா் காவல்நிலையம் உடனடியாக மூடப்பட்டு, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மகளிா் காவல்நிலையப் பணிகள் தற்காலிகமாக நடைபெறும் எனவும், தனிமைப்படுத்தப்பட்டோருக்கான கரோனா பரிசோதனை முடிவு வந்த பின், அடுத்த 2 நாள்களில் மகளிா் காவல்நிலையம் மீண்டும் திறக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT