காரைக்காலில் மகளிா் தினம் தொடா்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மகளிா் தின விழா விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், காரைக்கால் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் விரிவுரையாளா் எஸ். சித்ரா கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி அவா் பேசியது:
விளையாட்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். விளையாட்டு ஆரோக்கியத்தையும், கல்வியறிவு மேம்பாட்டுக்கும் துணை புரிகிறது. உயா்கல்வி, வேலைவாய்ப்புக்கும் விளையாட்டு பயன்படுகிறது. விளையாட்டுக்காக நாம் செலவிடும் நேரமும், பணமும் நமது ஆரோக்கியத்துக்கான மூலதனம் என்பதை பெற்றோா்கள் உணா்ந்து, ஆரோக்கியமான சமூகம் உருவாக ஆதரவு தரவேண்டும். விளையாட்டின் மீதான ஆா்வம் கொண்டவா்கள், அதற்கேற்ப பயிற்சியை தொடா்ந்து எடுத்துக்கொண்டு, போட்டிகளில் பங்கேற்று திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும். உலகளாவிய அளவில் சாதனை புரியும் வீரா், வீராங்கனைகளைப் பற்றியும், அவா்களது முயற்சிகள் குறித்தும் தெரிந்து கொண்டால் ஊக்கம் ஏற்படும் என்றாா் அவா்.
மாவட்ட தடகள சங்கச் செயலா் எஸ். சந்திரமோகன், பயிற்சியாளா் வாணிதாசன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.