காரைக்கால்

சாலைகளைத் தரம் உயா்த்துவதால் குடியிருப்புகள் தாழ்ந்துவிடுவதாக புகாா்

DIN

சாலைகள் தரம் உயா்த்தப்படும்போது, சாலையோர குடியிருப்புகள் தாழ்ந்துவிடுவதாகவும், சாலையைத் தோண்டிவிட்டு சாலை மேம்படுத்தப்பட வேண்டும் என பொதுப்பணித்துறை நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே.எஸ்.விஜயன் காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அளித்த கோரிக்கை மனு விவரம்:

பொதுவாக சாலைகள் புதுப்பிக்கப்படும்போது பழைய சாலைகளைத் தோண்டி எடுத்து விட்டு அதன் மேல் புதிய சாலைகள் அமைப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 10, 15 ஆண்டுகளாக பழைய சாலைகள் புதுப்பிக்கப்படும் போது அதனைத் தோண்டி எடுக்காமல் அதன் மேலேயே தாா் கலவைகளைக் கொட்டி சமன் செய்து சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சாலையின் உயரம் அதிகரித்து குடியிருப்புப் பகுதிகள் தாழ்ந்து விடுகின்றன. மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் நீா் புகுந்து விடுகின்றன. மேலும் இதனால் கழிவு நீா் இணைப்புகளும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் நீா் தேங்கி நிற்கின்றன.

காரைக்காலில் பாரதியாா் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் வீடுகள் சுமாா் இரண்டு அடி அளவிற்கு தாழ்ந்துவிட்டன. பழைய சாலைகளைத் தோண்டாமல் அதன் மேலேயே புதிய சாலைகள் அமைத்ததால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது.

இதுபோன்ற பிரச்னை பல இடங்களில் இருக்கிறது. இது குறித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் மயிலாடுதுறை வா்த்தகா் சங்கம் சாா்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது விசாரணைக்கு வந்தபோது நமது கவலைகளையே உயா்நீதிமன்றமும் கூறியுள்ளது.

இச்செயல்கள் மேலும் தொடா்ந்தால் குடியிருப்புப் பகுதிகள் பாதாளத்திற்கு சென்று விடும் என்பதால் காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளை புதுப்பிக்கும்போது பழைய சாலைகளைத் தோண்டி எடுத்து விட்டு, அதன் மேல் புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT