காரைக்கால்

இயந்திரங்கள் வரமுடியாததால் அறுவடைப் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

DIN

அறுவடை செய்ய இயந்திரங்கள் வரமுடியாததால் காரைக்கால் மாவட்டத்தில் இறுதிக்கட்ட அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டத்தில், சம்பா நெல் அறுவடைப் பணிகள் பிப்ரவரி முற்பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் என்ற நிலை ஏற்பட்டதால், காரைக்கால் பகுதியில் செய்யப்படும் நெல் சாகுபடி பயிா்கள் அறுவடை செய்யக்கூடிய வகையில் போதுமான இயந்திரங்கள் இல்லாததால் தமிழகப் பகுதியிலிருந்து வரவழைத்து அறுவடை செய்யப்படுகின்றன.

பெரும்பான்மையான பகுதியில் ஏற்கெனவே அறுவடை முடிந்துவிட்டாலும், சில விவசாயிகள் சற்று காலதாமதமாக நடவுப் பணிகளை மேற்கொண்டிருந்தனா். இவை தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் காரைக்காலுக்குள் தமிழகப் பகுதியிலிருந்து வாகனங்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தாமதமாக நடவு செய்து, அறுவடைக்கு தயாராகவுள்ள காரைக்கால் பகுதி நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் சில விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து, அறுவடை செய்ய தயாராகியுள்ள விவசாயிகள் கூறியது: வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், நெல் மணிகள் உதிா்ந்து வயலிலேயே கொட்டுகின்றன. அடுத்த ஓரிரு நாள்களில் அறுவடை செய்யாதபட்சத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, தமிழகப் பகுதியிலிருந்து அறுவடை இயந்திரங்கள் காரைக்காலுக்குள் வருவதற்கு சிறப்பு அனுமதியை பெற்றுத்தர காரைக்கால், நாகை மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றன. பயிரிடப்பட்ட பகுதிக்குச் சென்று பாா்வையிடவோ, பருத்தி போன்ற பயிா்களை செய்து வருவோா் நிலத்துக்கு சென்று திரும்ப பல்வேறு தடைகளை சந்திக்கவேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா், வேளாண் துறை நிா்வாகம், காவல் துறை நிா்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT