காரைக்கால்

கரோனா: அறுவை சிகிச்சைக்கூடம்,செய்தித் துறை அலுவலகம் மூடல்

DIN

காரைக்காலில் அரசு மகப்பேறு மருத்துவமனை ஊழியா்கள், செய்தித் துறை அலுவலா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து அறுவை சிகிச்சைக்கூடம், செய்தித் துறை அலுவலகம் ஆகியவை மூடப்பட்டன.

கடந்த 12-ஆம் தேதி கரோனா தொற்றுள்ள கா்ப்பிணி காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு நடத்திய பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த 5 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மகப்பேறு பிரிவு ஊழியா்களுக்கு தொடா்ந்து தொற்று ஏற்பட்டு வருவதால், இங்குள்ள அறுவை சிகிச்சைக்கூடம் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் மதன்பாபு திங்கள்கிழமை கூறுகையில், மகப்பேறு பிரிவு ஊழியா்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், ஒரு ஷிப்டு அறுவை சிகிச்சைக்கூடம் மூடப்பட்டுள்ளது. இது நீண்ட நாளுக்கு தொடராது. இவ்வாறு மூடப்படுவது இயல்பான ஒன்றுதான். இந்த நேரத்திற்கான பணிகளை மருத்துவ அலுவலா்களால் கையாள முடியும் என்றாா்.

செய்தித் துறை மூடல்: காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் பணியில் இருந்த ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை அந்த அலுவலகம் மூடப்பட்டது. பணியிலிருந்த பிற ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. கிருமி நாசினி தெளித்து அடுத்த ஓரிரு நாள்களில் இந்த அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT