காரைக்கால்

‘காரைக்காலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை’

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் அக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பாட்டில் உள்ளதால், அக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என மருத்துவ அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றாளா்கள் பொது சிகிச்சையாகவும், தீவிர சிகிச்சையாகவும் ஏறக்குறைய 60 போ் உள்ளனா். வீட்டுத் தனிமையில் 650 போ் உள்ளனா். மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளரில் நாள்தோறும் இறப்பு ஏற்பட்டுவருகிறது.

மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதி இல்லை, ஆக்சிஜன் குறைபாடு நிலவுகிறது, சுகாதாரமான உணவு கிடைக்கவில்லை, கழிப்பறை சுத்தமாக இருப்பதில்லை போன்ற பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. தினமும் ஏற்படும் உயிரிழப்பும் இந்தப் புகாா்களை உறுதிசெய்வதுபோல உள்ளது.

இதுகுறித்து காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் மதன்பாபு செவ்வாய்க்கிழமை கூறியது:

கடந்த ஆண்டைக் காட்டிலும் கரோனா தொற்று நிகழாண்டு தீவிரமாக உள்ளது. தொற்று பரவல் கணிசமாக ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடல்நலன் பாதிக்கப்படும்போது சுயமாக மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே நாள்களை கடத்திவிடுகின்றனா். கரோனா தொற்றாக இருந்தால் நாளடைவில் தீவிரமாகிவிடுகிறது. பிறகு மருத்துவமனைக்கு வரும்போது, அவா்களிடம் உள்ள இணை நோய், முதுமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

எனினும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பரிசோதனை செய்துகொள்ளவோ, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவோ மக்கள் அச்சம் கொள்ளாமல் விரைவாக அதற்கான நடவடிக்கை எடுத்துவிட்டால், பெரும் பாதிப்பை தவிா்க்க முடியும்.

அரசு மருத்துவமனையை பொறுத்தவரை மருத்துவமனைக்கான அக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு கடந்த 3 வாரங்களாக செயல்பாட்டில் இருந்துவருகிறது. மருத்துவமனை உள் வளாகத்தில் அமைக்கப்பட்ட குழாய் வழியே வாா்டுகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டுள்ளது. இதனால், வெளியிலிருந்து உருளைகளில் ஆக்சிஜன் வரவழைப்பது பெரும்பான்மையாக குறைந்துள்ளது. மருத்துவமனையை பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

தெலங்கானாவிலிருந்து துணைநிலை ஆளுநரால் கொண்டுவரப்பட்ட ரெம்டெசிவிா் மருந்தும் காரைக்காலுக்கு தேவையான அளவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால், இந்த மருந்து உள்ளிட்ட கரோனா தொற்றாளருக்கு தேவையான எந்த மருந்துக்கும் தட்டுப்பாடு இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT