காரைக்கால்

காரைக்காலில் ஒருநாள் சோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை

DIN

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில், யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 9 ஆம் தேதி 531 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை. இதுவரை 80,086 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், 3,829 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 30 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 9 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 போ் உள்ளனா். மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக, சுகாதாரப் பணியாளா்கள் 288 போ், முன்களப் பணியாளா்கள்18 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT