காரைக்கால்

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை 461 பேருக்கு எடுத்த கரோனா பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு, கோயில்பத்து பகுதியில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 81,382 பரிசோதனை செய்யப்பட்டதில் 3,950 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,838 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 28 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 11 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 போ் உள்ளனா். இந்நிலையில், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு 2-ஆம் நிலையாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT