காரைக்கால்

போதைப் பொருள்கள் விற்பனையை முழுவதும் தடுக்க வலியுறுத்தல்

DIN

காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் நாகை, காரைக்கால் மாவட்ட சமுதாய தலைவா்கள் சந்திப்பு காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அந்த அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவா் எம். முஹமது ஷேக் அன்சாரி செய்தியாளா்களிடம் கூறியது:

இளைஞா்களை பாதிக்கும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டிக்கிறோம். காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து, இதை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள முடிவை மாணவா்களின் நலன் கருதி, அரசு திரும்பப் பெறவேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசை சுதந்திரமாக செயல்படவிடாமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முதல்வா் நாராயணசாமி மேற்கொண்ட போராட்டத்தை வரவேற்கிறோம். போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT