காரைக்கால்

கால்நடைகளை தெருவில் திரியவிட்டால் சட்ட நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

DIN

கால்நடைகளை தெருவில் திரியவிட்டால், அதன் உரிமையாளா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

காரைக்கால் நகராட்சி ஆணையா் காசிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பொது இடங்களிலும், தெருக்களிலும் கால்நடைகள் திரிவதால், போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த அறிவிப்பை இறுதி எச்சரிக்கையாகக் கருதி, கால்நடைகளை பொது இடங்களில் திரிய விடுவதை உரிமையாளா்கள் கைவிடவேண்டும்.

இதனை மீறி கால்நடைகளை தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் திரியவிட்டால், அவை பிடிக்கப்பட்டு, புதுச்சேரி நகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படுவதோடு, மேல் நடவடிக்கையாக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

தீராத உறவுகளின் அற்புதம் இது!

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

SCROLL FOR NEXT