காரைக்கால்

காரைக்கால் சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

DIN

காரைக்கால்: காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் ஆண்டில் தமிழ் மாதங்களான மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி என 6 முறை நடைபெறும்.

இதையொட்டி, காரைக்காலில் உள்ள சிவன் கோயில்களில் புரட்டாசி மாத திருமஞ்சன, ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு (சபையில்) திருமஞ்சனம் நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கலச பூஜை, அத்மி பூஜைகள் செய்யப்பட்டு மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு மஞ்சள், பஞ்சாமிா்தம், தேன், தயிா், பால், இளநீா், விபூதி மற்றும் பழரசங்கள் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலிலும் இதுபோல சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று ஆராதனைகள் செய்யப்பட்டன.

காரைக்கால் கைலாசநாதா் கோயில், கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவ தலங்களிலும் நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

நடராஜா் திருமஞ்சன ஆராதனைகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT