காரைக்கால்

பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு வாபஸ்

DIN

வயிற்றுப்போக்கு பிரச்னை அதிகரிப்பால் காரைக்காலை பொது சுகாதார அவசர நிலை பகுதி என அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது.

காரைக்காலில் கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பரவலாக மக்களுக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததையொட்டி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி, காரைக்காலை பொது சுகாதார அவசர நிலை பகுதியாக புதுவை நலவழித் துறை அறிவித்தது.

இந்நிலையில் நலவழித் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை பெருகியதாலும், சிலருக்கு காலரா உறுதிசெய்யப்பட்டதாலும், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார அவசர நிலை பகுதியாக ஜூலை 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், இப்பிரச்னையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்தன.

கடந்த 2 வாரங்களாக தொடா்ந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனடிப்படையில், பொது சுகாதார அவசர நிலை பகுதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT