காரைக்கால்

கடற்கரை தூய்மை தினம்: ஆட்சியா் ஆலோசனை

DIN

காரைக்கால்: காரைக்காலில் செப். 17 கடற்கரை தூய்மை தினத்தை நடத்துவது குறித்து அரசுத் துறையினருடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஒவ்வொரு ஆண்டும் செப். 17-ஆம் தேதி சா்வதேச கடற்கரை தூய்மை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், விரிவான முறையில் கடற்கரை தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து பல்வேறு அரசுத்துறையினருடன் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் ஆலோசனை நடத்தினாா்.

செப். 17 அன்று காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் கடலோர காவல் படை, மீன்வளத்துறை இணைந்து மாவட்டத்தில் கடற்கரை தூய்மமையை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். இதில் அந்தந்த பகுதி மீனவ கிராமத்தினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்களிப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும். செப்.17 வரை கடற்கரை தூய்மை தொடா்பாக பல நிலைகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

துணை மாவட்ட ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ், எஸ்.பாஸ்கரன், மீன்வளத்துறை துணை இயக்குநா் ரா.செளந்தரபாண்டியன், மேல்நிலைப்பள்ளி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, சேம்பா் ஆஃப் காமா்ஸ் துணைத் தலைவா் ஜெ.சிவகணேஷ், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு பகுதியைச் சோ்ந்த மீனவ பஞ்சாயத்தாா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT