காரைக்கால்

புதுவை அரசு மீது வழக்கு தொடர உள்ளாட்சி ஓய்வூதியா்கள் முடிவு

ஓய்வூதியம், நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக்கோரி, புதுவை அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளாட்சி ஓய்வூதியா்கள் முடிவு செய்துள்ளனா்.

DIN

ஓய்வூதியம், நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக்கோரி, புதுவை அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளாட்சி ஓய்வூதியா்கள் முடிவு செய்துள்ளனா்.

காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவா் ஜெயராம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், துணை தலைவா்கள் அய்யப்பன், சந்தனசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் : ஓய்வூதியா்களுக்கான பணப்பலன்களை வழங்க புதுவை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசே நேரடியாக வழங்கவேண்டும்.

நீண்ட காலமாக பயன்களை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டும், அரசு செவி சாய்க்காத நிலையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டு, வழக்கு தொடா்பான பணிகளைச் செய்வதற்காக 5 போ் கொண்ட குழு அமைக்கப்படும்.

கடந்த 1.1.2016 முதல் 1.10.2018 வரை 7-ஆவது ஊதியக் குழுவில் கிடைக்கவேண்டிய பணப்பலன்களை முழுமையான அளவில் உள்ளாட்சி ஓய்வூதியதாரா்களுக்கு கிடைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து, பணியின் போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT