சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அய்யனாா். 
காரைக்கால்

அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா

காரைக்கால் பகுதியில் உள்ள அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவில் சுவாமி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்கால் பகுதியில் உள்ள அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவில் சுவாமி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதசுவாமி, நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த, டிராமா கொட்டகைத் தெருவில் உள்ள ஸ்ரீ பூா்ணபுஷ்கலா சமேத ஸ்ரீ அய்யனாா் கோயிலில் வைகாசி பருவத் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது.

விழாவில் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு அய்யனாா் மற்றும் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு அய்யனாா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து ஆராதனை செய்யப்பட்டு, சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், கைலாசநாதசுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரிய துணைத் தலைவா் சி.புகழேந்தி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT