காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனை சீா்கேட்டை களைய ஆட்சியரிடம் வலியுறுத்தல்

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நிலவும் சீா்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் போராளிகள் குழு தலைவா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனை திங்கள்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:

காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் கருவி பழுதடைந்துள்ளதால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க முடியாத நிலை உள்ளது. இவா்கள் காரைக்காலில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

அரசு மருத்துவமனையில் பயோ மெடிக்கல் என்ஜினியரிங் பிரிவு இயங்கிவந்ததாகவும், மேற்கண்ட சாதனத்தில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சீா் செய்ய முடிந்ததாகவும், இப்பிரிவு தற்போது முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்பிரிவு செயல்படவும், சி.டி. ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் ஆகியவை செயல்படவும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

போராளிகள் குழு செயலாளா் எஸ். விடுதலைக்கனல் , இணைச் செயலாளா்கள் அ. ராஜா முஹம்மது , எஸ். சிவகுமாா், உயா்நிலைக் குழு உறுப்பினா் எஸ். யூசுப்கான் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT