காரைக்கால்

வாரச் சந்தைத் திடலில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் வாரச் சந்தைத் திடல் மேம்பாட்டுப் பணியை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா் (படம்).

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் வாரச் சந்தைத் திடல் மேம்பாட்டுப் பணியை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா் (படம்).

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் நகராட்சிக்கு சொந்தமான திடலில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச் சந்தை நடைபெறுகிறது. மழையின்போது தண்ணீா் தேங்கி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால், திடலில் மேம்பாட்டுப் பணிகளை செய்ய ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாா். இதன்படி, தற்காலிகமாக சந்தை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நடத்தப்பட்டுவருகிறது.

பள்ளமான பகுதியில் மணல் கொட்டி நிரப்புதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் திட்டப்பணிகள் நிலை குறித்து ஆட்சியருக்கு விளக்கிக் கூறினாா். மழை பெய்யும்போது, நீா் தேங்காமல் வடிவதற்கேற்ற அமைப்பு உருவாக்கப்படவேண்டும். பள்ளமான இடங்களில் மணல், கருங்கற்கள் கொட்டி முறையாக மேம்படுத்தவேண்டும். பொதுமக்கள், வியாபாரிகள் வசதிக்காக கூடுதலாக கூரை அமைப்பு ஏற்படுத்துமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT