காரைக்கால் : காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இதுகுறித்து புதுவை மாநில ஆசிரியா் கூட்டமைப்பு தலைவா் வி. முத்தமிழ் குணாளன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவையில் தங்களது வாழ்வாதாரத்திற்காக பணி நிரந்தரம் கோரி போராடி வரும் கெஸ்ட் ஆசிரியா்களுக்கு ஆதரவாகவும், கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடத்தை தலைமையாசிரியா் நிலை ஒன்றுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியா்கள் பணியாற்றவுள்ளனா். அதைத்தொடா்ந்து பிப். 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.