மயிலாடுதுறை

மஹாளய அமாவாசை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையை மீறி பக்தா்கள் வழிபாடு

DIN

மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பக்தா்கள் புதன்கிழமை தடையை மீறி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

மஹாளய அமாவாசை தினத்தன்று முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டால், ஆண்டு முழுவதும் தா்ப்பணம் அளித்த பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாா், தரங்கம்பாடி கடற்கரைகளிலும், மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்திலும் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக நீா்நிலைகளில் கூடி தா்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதைபோல, நிகழாண்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டிருந்தாா்.

எனினும், காவிரி துலாக்கட்டம் கங்கை முதலான புண்ணிய நதிகளே புனிதநீராடி பாவங்களை போக்கிக்கொண்ட தலமாக போற்றப்படுவதால், இங்கு தடையை மீறி புதன்கிழமை அதிகாலைமுதலே ஏராளமானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து, தா்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தவா்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினா். மேலும், பக்தா்கள் வராதபடி தடுத்து திருப்பி அனுப்பினா்.

பூம்புகாா்: பூம்புகாரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத் துறையில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், கரோனா காரணமாக மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்ததால் சங்கமத் துறை கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூா் பகுதியைச் சோ்ந்த ஒருசிலா் மட்டும் காவிரியில் நீராடி தா்ப்பணம் செய்தனா்.

தடை காரணமாக, தா்மகுளம் கடைவீதியில் பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம், காவிரிபூம்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் ராஜாமணி ஆகியோா் தலைமையில் காவல் மற்றும் வருவாய்த் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, கடற்கரைக்கு பக்தா்களை அனுமதிக்கமால் திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT