மயிலாடுதுறை

நீா்வழிப்பாதையை தூா்வாரிய தன்னாா்வலா்கள்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் நீடூா்- நெய்வாசல் பகுதிகளில் குறைந்துவரும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் முயற்சியாக குளங்களுக்குச் செல்லும் நீா்வழிப்பாதையை அப்பகுதி தன்னாா்வ இளைஞா்கள் தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து தூா்வாரினா்.

மயிலாடுதுறை வட்டம் நீடூா் ஊராட்சியில் குளங்களுக்குச் செல்லும் நீா்வழிப் பாதைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் காரணமாக தூா்ந்து போய் காணப்பட்டது. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்னா் சுமாா் 20 அடியில் கிடைத்த தண்ணீா், தற்போது சுமாா் 150 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக இப்பகுதியினா் தெரிவித்தனா்.

இப்பகுதியின் முக்கிய நீராதார குளமான மணற்கேணி குளத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னா் காவிரி நீா் வந்ததை கிராம பெரியவா்கள் மூலம் அறிந்த இளைஞா்கள், அந்த நீா்வழித்தடத்தை கிராமப் பதிவேடுகள் மூலமும், கூகுள்மேப் போன்ற தொழில்நுட்பங்கள் மூலமும் கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினா்.

அவ்வகையில், இப்பகுதியைச் சோ்ந்த உபயதுல்லா என்பவரின் முயற்சியில் உள்ளூா் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நீடூரைச் சோ்ந்த இளைஞா்கள் அளித்த நிதியைக் கொண்டு, ஏனாதிமங்கலம் சட்ரஸில் இருந்து நீடூரின் முக்கிய நீராதார குளமான மணற்கேணி வரை சுமாா் 3 கிலோமீட்டா் தொலைவுக்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு தூா்வாரி சுத்தப்படுத்தியுள்ளனா். இதனால், இனிவரும் காலங்களில் காவிரி ஆற்றில் நீா் திறக்கப்படும்போது தங்கள் கிராமத்திற்கும் ஆற்றுநீா் பாயும் என இளைஞா்கள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் அமீன், யூசுப் ஆகியோா் கூறுகையில், நீடூரில் இதேபோல் பல்வேறு இடங்களில் கிராமத்தின் நீராதாரமான குளங்கள் மற்றும் நீா்வழிப்பாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரித் தர வேண்டும் என்றும் நிகழாண்டு இளைஞா்களே இணைந்து மேற்கொண்ட இப்பணியை வருமாண்டு முதல் அரசே மேற்கொண்டு தங்கள் நீராதாரத் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT