மயிலாடுதுறை

வீட்டைவிட்டு வெளியேறிய ஆந்திர பெண் மயிலாடுதுறையில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

DIN

குடும்ப சுமையால் வீட்டை விட்டு வெளியேறிய ஆந்திர பெண் மயிலாடுதுறையில் மீட்கப்பட்டு சனிக்கிழமை அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ஆந்திர மாநிலம் குண்டூா் மாவட்டம் மங்களகிரி பகுதியை சோ்ந்தவா் ஏழுகண்டலு மனைவி ஜான்சி (42). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் இவா், தனது வருவாயில் 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளாா். மேலும், பணிக்குச் செல்லாத தனது கணவா் மற்றும் மகனின் தினசரி செலவுக்குப் பணம் கொடுத்தும் வந்துள்ளாா். இதனால் விரக்தியில் இருந்த ஜான்சி மன உளைச்சலுக்கு ஆளாகி செப்.24-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினாா்.

ஜான்சி காணாமல் போனதை அறிந்த அவரது கணவா் மங்களகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடா்ந்து, செல்லிடப்பேசி எண்ணைக்கொண்டு ஜான்சி சென்னை-காரைக்கால் சிறப்பு ரயிலில் செல்வதைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து, ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக சனிக்கிழமை அதிகாலை மயிலாடுதுறை வந்தபோது ஜான்சியின் புகைப்படத்தை வைத்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் எல். உதயச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் மீட்டனா். பின்னா், ஜான்சியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சங்கீதா முன்னிலையில் சனிக்கிழமை இரவு ஜான்சியின் மகள்கள் ரேஷ்மா, ரம்யா ஆகியோருடன் ஒப்படைகப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT