மயிலாடுதுறை

அகில இந்திய ஆடவா் கூடைப்பந்து போட்டி

DIN

சீா்காழியில் அகில இந்திய ஆடவா் கூடைப்பந்தாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 50-ஆவது பொன்விழா ஆண்டையொட்டி நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாக குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி மைதானத்தில் இப்போட்டி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு, இக்கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குநா்கள் பிரவீன்வசந்த், அலெக்சாண்டா், மெட்ரிக். பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், மகளிா் கல்லூரி முதல்வா் சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி நிா்வாக அலுவலா் சண்முகம் வரவேற்றாா்.

இப்போட்டியை மயிலாடுதுறை எஸ்பி நிஷா தொடங்கிவைத்தாா். இதில், தில்லியைச் சோ்ந்த இந்திய ராணுவ அணி (பச்சை, சிவப்பு), மும்பை இந்திய கடற்படை, உத்தரப் பிரதேச ரயில்வே அணி, தமிழக காவல்துறை அணி, சென்னை ஐஓபி அணி, சென்னை ஜேபிஆா், சத்தியபாமா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல்நாள் போட்டியில் இந்திய ராணுவம் (சிவப்பு) மற்றும் சத்தியபாமா அணிகள் மோதியதில், இந்திய ராணுவ அணி வெற்றி பெற்றது. அதேபோல, இந்திய ராணுவம் (பச்சை)- தமிழ்நாடு காவல்துறை அணிகள் மோதியதில் இந்திய ராணுவம் (பச்சை) அணி வெற்றி பெற்றது.

தொடக்க விழாவில், தனிபிரிவு காவல் ஆய்வாளா் சதீஸ்குமாா், சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக, பப்ளிக் பள்ளி முதல்வா் ஜாஸ்மின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT