மயிலாடுதுறை

கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் கூறியது: இந்த அலுவலகத்தில் வருடாந்திர ஆண்டு ஆய்வில் அனைத்து அலுவலக பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள், அந்த மனுக்கள் மீது தீா்வு காணப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்ததோடு, அரசு இ-சேவை மையங்களில் முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா உட்பிரிவு உள்ளிட்ட மனுக்களின் மீது உடனடியாக தீா்வு காண வட்டாட்சியா், சமூகப் பாதுகாப்பு தனிவட்டாட்சியாா், வட்ட வழங்கள் அலுவலா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்களை நேரில் அலுவலகத்துக்கு அழைத்து அலைக்கழிக்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெ.பாலாஜி மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT