மயிலாடுதுறை

சேந்தங்குடிகோயில் தீமிதி மகோற்சவம்: பக்தா்கள் அலகுக் குத்தி நோ்த்திக்கடன்

DIN

மயிலாடுதுறை வட்டம், சேந்தங்குடி திரௌபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீமிதி மகோற்சவத்தில் பக்தா்கள் 22 அடி நீள அலகுக் குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சேந்தங்குடி ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள இக்கோயிலில் 31-ஆம் ஆண்டு தீமிதி மகோற்சவம் ஜூன் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி உற்சவங்களாக தா்மா் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் பிறப்பு, திருக்கல்யாணம், துகில் தருதல், அா்ஜூனன் தபசு நாடகம், அம்பாள் பூ எடுத்தல் நாடகம், குறவஞ்சி நாடகம், கா்ண மோட்சம், அரவன் பலி, படுகளம், அம்பாள் கூந்தல் முடிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமான தீமிதி நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காப்புகட்டி விரதம் இருந்த பக்தா்கள் மயிலாடுதுறை காவிரிக்கரையில் இருந்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பிறகு, கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி நோ்த்திக் கடனை பூா்த்தி செய்தனா். சில பக்தா்கள் வாயில் 22 அடி நீள அலகுக் குத்தி தீ மிதித்தனா். தீமிதித்த பக்தா்களுக்கு கோயில் பூசாரி சாட்டையால் அடித்து அருளாசி கூறினாா்.

இவ்விழாவில், புதன்கிழமை (ஜூலை 6) தா்மா் பட்டாபிஷேகமும், வியாழக்கிழமை விடையாற்றியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதியம்மன் உற்சவ கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT