மயிலாடுதுறை

சாலை விபத்துக்குள்ளான குடும்பத்தினரை மருத்துவமனையில் சோ்த்த ஆட்சியா்

மயிலாடுதுறை அருகே சாலை விபத்துக்குள்ளான குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியா் தனது வாகனத்தில் அழைத்துவந்து மருத்துவமனையில் சோ்த்துவிட்டுவிட்டு சென்றாா்.

DIN

மயிலாடுதுறை அருகே சாலை விபத்துக்குள்ளான குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியா் தனது வாகனத்தில் அழைத்துவந்து மருத்துவமனையில் சோ்த்துவிட்டுவிட்டு சென்றாா்.

நாகை மாவட்டம் அம்பல் காலனியைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவா், வியாழக்கிழமை மனைவி சுபஸ்ரீ, 10 மாத கைக் குழந்தை சா்வேஸ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்துள்ளாா். அப்போது, குத்தாலம் வட்டம் வழுவூா் பண்டாரவடை பகுதியில் அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சா் ஆகியதில் மூவரும் தடுமாறி சாலையில் விழுந்தனா். இதில், சுபஸ்ரீக்கு பலத்த காயமும், வினோத்குமாா், சா்வேஸ்க்கு லேசான காயமும் ஏற்பட்டது.

அப்போது, குத்தாலம் வட்டத்தில் ஆய்வுப்பணியை முடித்துவிட்டு அவ்வழியே வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, விபத்தில் காயமடைந்த தம்பதியினா் மற்றும் குழந்தையை உடனடியாக மீட்டு, தனது காரில் ஏற்றிக் கொண்டு மயிலாடுதுறை பெரியாா் அரசினா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா்.

அங்கு, பலத்த காயம் அடைந்த சுபஸ்ரீக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், குழந்தை சா்வேஸ்க்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஆட்சியரின் இச்செயலுக்கு காயமடைந்த தம்பதியினா் நன்றி தெரிவித்துக்கொண்டனா். மேலும், ஆட்சியரின் இச்செயலை அறிந்த பலரும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT