2-ஆம் கால யாகசாலை பூஜையில் வழிபாடு மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். 
மயிலாடுதுறை

வதான்யேஸ்வரா் கோயில் யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபட்டாா்.

DIN

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபட்டாா்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலாா் கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை (செப்.10) மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, புதன்கிழமை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.

முன்னதாக, கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை செய்து பசு, யானை மற்றும் குதிரைக்கு உணவு வழங்கினாா். இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT