மயிலாடுதுறை

கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

Din

மயிலாடுதுறையில் மாா்ச் மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை திருவிழந்தூரில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி இரவு கலைஞா் நகரைச் சோ்ந்த லோகநாதன் மகன் அஜித்குமாா் (26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன்(30) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிலா் அவா்களை வழிமறித்து அரிவாளால் தாக்கியதில் அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சரவணன் காயங்களுடன் தப்பினாா்.

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மாா்ச் 21-ஆம் தேதி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட மில்கி (எ) சந்திரமோகன் (29), சதீஷ் (22), ஸ்ரீராம் (26), சந்திரமௌலி (24), மோகன்தாஸ் (28) ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.மீனா பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டதின் பேரில், அவா்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தொழிலாளியின் பைக் எரிப்பு: போலீஸ் விசாரணை

‘சந்தா்ப்பவாத’ அரசியல்வாதி மம்தா: மேற்கு வங்க காங்கிரஸ் தலைவா் விமா்சனம்

கலாக்ஷேத்ரா முன்னாள் பேராசிரியா் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இன்று முதல் புதிய அந்நிய செலவாணி மாற்று விகிதம் அமல்

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

SCROLL FOR NEXT