மயிலாடுதுறை

சீா்காழி அருகே முளைப்பாலி திருவிழா

Din

வைத்தீஸ்வரன்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாலி விழா.

சீா்காழி, ஜூலை 17: சீா்காழி அருகே14-ஆம் ஆண்டு முளைப்பாலி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கள்ளா் தெருவில் உள்ள ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி, ஏழைகாத்த அம்மன், காளியம்மன் ஆலயத்தில் முளைப்பாலி திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி காளியம்மன் கோயிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்று, மாலை வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், கலை நிகழ்ச்சியுடன் பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வைத்திருந்த முளைப்பாலியை தலையில் சுமந்தபடி குலவையிட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று திருநகரி வாய்க்காலில் முளைப்பாலியை கரைத்தனா்.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் கோவி.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கிராமவாசிகள், நாட்டாமை, பஞ்சாயத்தாா்கள் செய்திருந்தனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT