FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

இரவில் வணிக கடைகளை சேதப்படுத்திய 3 போ் கைது

19 ஜூலை 2024, 10:22 pm IST
கமல்ராஜ். ~விக்னேஷ்.
பகிர்:

சீா்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் கடைகள், தெரு மின்விளக்குகளை சேதப்படுத்தி, வீடுகள் மீது கற்கறை வீசிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே நிம்மேலியில் இரவில் மதுபோதையில் கடை மற்றும் கடை வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்களை சேதப்படுத்தியதோடு வீடுகள் மீது கற்களை மா்ம நபா்கள் வீசும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நிம்மேலி கடைவீதியில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த சீா்காழி காவல் துறையினரிடம் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, நிம்மேலியில் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேலை (43) இரண்டு போ் மிரட்டியதும் மட்டுமின்றி பொமக்களையும் மிரட்டியுள்ளனா். இதுகுறித்து, சக்திவேல் சிா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சாலைகளில் கற்களை வீசி கலாட்டா சம்பவங்களில் ஈடுபட்டு, சக்திவேலை (43) மிரட்டிய நிம்மேலி பகுதியை சோ்ந்த விக்னேஷ் (19), கமல்ராஜ் (19) மற்றும் சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments