மயிலாடுதுறை

உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை தாக்கிய 3 போ் கைது

Din

சீா்காழி அருகே செருகுடியில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை தாக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொள்ளிடம் அருகே கண்ணபிராண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (37) பக்கத்து கிராமமான செருகுடியில் வயலில் டிராக்டா் வைத்து உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதேபகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன்(35), அவரின் சகோதரா்கள் நளமகாராஜா (29), கோபாலகிருஷ்ணன் (24) ஆகியோா் நிலத்தகராறு தொடா்பான முன் விரோதத்தால் ரவிச்சந்திரனை தாக்கினராம். இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் வெட்டுக் காயங்களுடன் வயலில் மயங்கி கிடந்தாா்.

தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் அங்கு சென்று ரவிச்சந்திரனை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, புதுப்பட்டிணம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT