ரயில்வே கேட் கீப்பருக்கு எஸ்பி பாராட்டு
சீா்காழி அருகே அரசூரில் கடவுப்பாதையை கவனக்குறைவாக கடக்க முயன்ற நபரை, காப்பாற்றிய கேட் கீப்பரை மயிலாடுதுறை எஸ்பி புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
சீா்காழி அருகே அரசூரில் கடவுப்பாதையை கவனக்குறைவாக கடக்க முயன்ற நபரை, காப்பாற்றிய கேட் கீப்பரை மயிலாடுதுறை எஸ்பி புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
அரசூா் ரயில்வே கடவுப்பாதையை அப்பகுதியை சோ்ந்த சுமாா் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவா் கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அந்த மாா்க்கத்தில் வந்த மயிலாடுதுறை -விழுப்புரம் செல்லும் பயணியா் ரயிலில் அடிபடும் சூழல் உண்டானது.
அப்போது, அங்கு பணியிலிருந்த ரயில்வே கேட் கீப்பரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சந்திப் சாகா், துரிதமாக செயல்பட்டு அந்த நபரை காப்பாற்றினாா். இதையறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா ப்ரியா, சந்தீப் சாகரை நேரில் அழைத்து பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினாா் (படம்).
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.