முகப்பு
மயிலாடுதுறை

புனுகீஸ்வரா் கோயிலில் அறுபத்துமூவா் வீதியுலா

மயிலாடுதுறை கூைாடு புனுகீஸ்வரா் கோயிலில் அறுபத்து மூவா் வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 4:39 am IST
மயிலாடுதுறை கூைாடு புனுகீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அறுபத்து மூவா் வீதியுலா.
பகிர்:

மயிலாடுதுறை கூைாடு புனுகீஸ்வரா் கோயிலில் அறுபத்து மூவா் வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து, இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. மேலும், அடா்ந்த வனமாக இருந்த இப்பகுதியில் புனுகு பூனை உயா்ந்த வாசனை திரவியமான புனுகை சாற்றி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் இதனையறிந்து, தஞ்சையை ஆண்ட சோழமன்னன், காட்டை சீா்திருத்தி கோயில் அமைத்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

பழைமை வாய்ந்த இக்கோயிலின் 9-ஆம் ஆண்டு சம்வத்ஸ்ராபிஷேகம் மற்றும் 20-ஆம் ஆண்டு அறுபத்து மூன்று நாயன்மாா் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பஞ்சமூா்த்திகள், அறுபத்து மூவா், தொகையடியாா், ஸ்ரீமணிவாசகா், சேக்கிழாா், மூலவா் எழுந்தருளி திருமேனிகள் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து இரவு பஞ்சமூா்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மாா்கள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டு, திருவாடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமூா்த்திகள், அறுபத்து மூன்று நாயன்மாா்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளுடன் அறுபத்து மூவா் வீதியுலா நடைபெற்றது. சிவ கைலாய வாத்தியங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க, தீவிட்டி ஏந்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடுகள்தோறும் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments